News
Loading...

மக்கள் கூட்டம் அதிகரித்ததால் திறக்கபட்ட 13 நாளில் மூடபட்ட சீனா கண்ணாடி பாலம்

மக்கள் கூட்டம் அதிகரித்ததால் திறக்கபட்ட 13 நாளில் மூடபட்ட சீனா கண்ணாடி பாலம்

பார்வையாளர்களின் நெரிசல் பலமடங்கு அதிகமானதால் நீளமான கண்ணாடிப்பாலம் மூடப்பட்டது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில்  ஜாங்ஜியாஜீ பகுதியில் யூண்டா மலைபகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிப்பாலமானது இரண்டு உயரமான மலை உச்சிகளுக்கு இடையே அரை கிலோ மீட்டர் பகுதியில் 980 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் தரைப்பகுதி கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழேயுள்ள பள்ளத்தாக்கு பகுதியினை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த பாலம் 2 வாரங்கள் மூடப்படுவதாக அறிவிக்கபட்டு உள்ளது.

இந்த நிலையில் அந்த கண்ணாடி பாலம் திடீரென்று மூடப்பட்டதன் காரணத்தை விளக்கிய நிர்வாக அதிகாரி ஒருவர், பாலம் மூடப்பட்டதற்கு பாலத்தில் உடைப்போ, விரிசலோ காரணம் கிடையாது. கட்டுக்கடங்காத பார்வையாளர்களின் வருகை காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 8000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எண்ணினோம். ஆனால் அதை விட அதிகமானோர் வருவதால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இதன் காரணமாகத்தான் பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், மற்றபடி எந்த ஒரு பாதிப்பும் பாலத்திற்கு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 20 ஆம் தேதி தான் பாலம் திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்டு 13 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், தற்போது பாலம் மூடப்பட்டுள்ளது பொதுமக்கள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...