News
Loading...

டொனால்டு டிரம்ப் மனைவி முன்னாள் பாலியல் தொழிலாளி என்ற டெய்லி மெயில் மீது 1000 கோடி இழப்பீடு

டொனால்டு டிரம்ப் மனைவி முன்னாள் பாலியல் தொழிலாளி என்ற டெய்லி மெயில் மீது ரூ. 1000 கோடி இழப்பீடு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8–ந் தேதி நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் (70) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.

இந்த் நிலையில் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் ( வயது 46)  முன்னாள் பாலியல் தொழிலாளி என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டெய்லி மெயில் என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது

சுலோவேனியா நாட்டு குடிமகளான மெலினா கடந்த 1996ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், கடந்த 2005ம் ஆண்டு தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்பை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், டெய்லி மெயில் வெளியிட்டு உள்ள செய்தியில்

சுலோவேனியா நாட்டில் மெலானியா மெலினா டிரம்ப் சுஸி  என்ற மாடல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனம் மாடல் தொழில் மட்டுமின்றி பாலியல் தொழிலும் ஈடுப்பட்டு வந்துள்ளது. இதே நிறுவனத்தில் மாடலாக பணிபுரிந்த மெலானியா டிரம்பும் ஒரு பாலியல் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியினை அமெரிக்க நாட்டு கட்டுரையாளரான வெப்ஸ்டர் டர்பிளே என்பவர் உண்மை என உறுதிப்படுத்தி கூறியுள்ளார்.

ஆனால், இச்செய்தியை மெலானியா டிரம்பின் வழக்கறிஞர் உறுதியாக மறுத்துள்ளார். ‘தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்டு டிரம்பிற்கு எதிரானவர்கள் இதுபோன்ற புரளியை பரப்பி வருகின்றனர்.

டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவியின் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டுள்ள டெய்லி மெயில் மற்றும் அமெரிக்க கட்டுரையாளர் மீது 150 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.1003 கோடி) இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...