News
Loading...

ஷூக்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, ஒரு மினி கைடு!

ஷூக்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, ஒரு மினி கைடு

நாம் எவ்வளவு சிறப்பாக உடை உடுத்தினாலும் சரியான காலணிகள் அணியவில்லை என்றால், அத்தனையும் வேஸ்ட். உடைக்கும் ஷூக்களுக்குமான உறவு என்பது, ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த ஷூக்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, எந்த உடைக்கு எந்த ஷூ பொருத்தமானது... ஒரு மினி கைடு!

ஷூக்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, ஒரு மினி கைடு

ஷூக்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, ஒரு மினி கைடு

ஷூக்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, ஒரு மினி கைடு

காஸ்ட்லி லெதர் ஷூ மழையில் நனைந்துவிட்டால்...

*  நீரை எல்லாம் நீக்கிவிட்டு, உலர்ந்த துணியால் அதிக அழுத்தம் தராமல் துடைக்கவும்.

*  நியூஸ்பேப்பர் இருந்தால், அதை நன்றாகச் சுருட்டி ஷூவுக்குள் செலுத்தி ஈரத்தை உறிஞ்சி வெளியேற்றவும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஈர பேப்பரை மாற்றிச் செய்யவும்.

*  ஷூவைக் காயவைக்கிறேன் என அடுப்புக்குப் பக்கத்திலோ அல்லது வேறு வெப்பமான பகுதிகளில் வைப்பதோ, ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதோ கூடாது. 

*  ஷூவைச் சூடாக்கினால், லெதர் காய்ந்து விரிசல்கள் உருவாகி ஷூவின் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும் இயலாது.

*  ஷூ அதுவாகவே காயட்டும். மின்விசிறி பயன்படுத்தலாம். 

*  ஷூ நன்றாகக் காய்ந்த பிறகு, லெதர் பாம்கள் அல்லது க்ரீம்கள் பயன்படுத்தி நன்றாகத் துடைக்க வேண்டும். சில மணி நேரத்துக்குப் பிறகு பாலீஷ் போடவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...