News
Loading...

ஜி 20 மாநாடு : சீனாவில் குவியும் தலைவர்கள்

ஜி 20 மாநாடு சீனாவில் குவியும் தலைவர்கள்

ஜி-20 எனப்படும் வளர்ந்த நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் சீனாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று ஹாங்ழோ நகரை வந்தடைந்தார்.
ஹாங்ழோ விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீனாவுடன் மறைமுகமாக பனிப்போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபரான ஒபாமா, தனது பதவிக்காலத்தில் கடைசியாக தற்போது சீனாவுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியும் தனது வியட்நாம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சீனா புறப்பட்டுச் சென்றுள்ளார். இவர்களை போன்று மற்ற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் சீனா வர உள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மோடி - ஒபாமா சந்திப்பும் நிகழும் என கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...