News
Loading...

SC, ST வழக்குகளை விசாரிக்க குஜராத்தில் 16 சிறப்பு நீதிமன்றங்கள்

SC, ST வழக்குகளை விசாரிக்க குஜராத்தில் 16 சிறப்பு நீதிமன்றங்கள்

தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விசாரிக்க குஜராத் மாநிலம் முழுவதும் 16 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அம்மாநில சட்டத்துறை இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நீதிமன்றங்கள் வருகின்ற அக்டோபர் 1 தேதி முதல் செயல்படவுள்ளது. அகமதாபாத் நகரத்தில் இரண்டு நீதிமன்றங்களும், சூரத் உள்ளிட்ட மற்ற நகரங்களில் தலா ஒரு நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளது.

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் பசுத்தோலை உரித்ததாக நான்கு தலித் இளைஞர்கள் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டே குஜராத் சட்டத்துறை, மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த சிறப்பு நீதிமன்றங்களை அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.