News
Loading...

கல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆப்கனுக்கு இந்தியா ரூ.6700 கோடி நிதி உதவி

கல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆப்கனுக்கு இந்தியா ரூ.6700 கோடி நிதி உதவி

ஆப்கன் நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.6700 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை அவர் நேற்று  சந்தித்து பேசினார். அப்போது ஆசிய பகுதியில் அரசியல் லாபங்களுக்காக தீவிரவாதத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அழித்து ஆதரவு தெரிவிப்பதற்கும் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இரு நாட்டின் தலைவர்களும் கூறினர். இது பாகிஸ்தானுக்கு விடுக்கும் மறைமுக எச்சரிக்கயைாக கருதப்படுகிறது. 

கைதிகள் பரிமாற்றம், சிவில் ஒத்துழைப்பு, வர்த்தகத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 3 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. சூரிய மின்சக்தி உற்பத்தியில் இணைந்து செயல்படவும் இருநாடுகளும் பரஸ்பரம் ஒப்பு கொண்டுள்ளன. இருநாடுகளில் பிரதிநிதிகள் குழுவின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறுகையில், "ஆப்கனில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, திறன்மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், மின்சாரம், கட்டமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் இந்தியா ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கும். உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை ஆப்கனுக்கு சப்ளை செய்யப்படும்’’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...