News
Loading...

பூரண குணமடைந்தார் கமல்

பூரண குணமடைந்தார் கமல்

கமல் கடந்த மாதம் அவரது அலுவலக படிக்கட்டில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது காலில் பலத்த அடிபட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவருக்கு காலில் இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய கமல், அங்கு டாக்டர்களின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார். இடையிடையே, இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கான எழுத்து வேலைகளையும் செய்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில், தற்போது கமல் பூரண குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அவர் இனி வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். 

இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, டாக்டர்கள் நான் வேலை செய்வதற்கான தகுதியை பெற்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். இவ்வளவு சீக்கிரமாக குணமாகியது உங்களால்தான். அவைனவருக்கும் நன்றி. நான் 'சபாஷ் நாயுடு' வழியாக என்னுடைய அன்பை வெளிப்படுத்தவிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...