News
Loading...

பிஸ்கெட் மட்டுமே உணவாக உட்கொண்டு உயிர்வாழும் இளம்பெண்

பிஸ்கெட் மட்டுமே உணவாக உட்கொண்டு உயிர்வாழும் இளம்பெண்

கர்நாடக மாநிலத்தில் பிஸ்கட் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வாழ்க்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ராமாவா (18). இவர் குழந்தையாக இருந்த போது, இவரது தாய் தனியார் நிறுவனத்தின் பிஸ்கெட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் ராமாவுக்கு பசி வரும் போதெல்லாம், அவரின் தாய் இத்தனியார் நிறுவனத்தின் ரொட்டியை பசும்பாலில் தொட்டு சாப்பிடவிட்டு பழகியுள்ளார்.

இது நாளடைவில் ராமாவுக்கு பிடித்துப் போக குழந்தை முதல் சிறுமி ஆகும் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். ராமாவின் தாய் சிறுமி தானே இளம்பெண் ஆனவுடன் சரியாகி விடும் என கருதி கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.

ஆனால் அதுவே தற்போது வினையாகியுள்ளது. 18 வயது நிரம்பியுள்ள ராமாவா பிஸ்கெட் தவிர வேறு எதுவும் உண்ண மறுக்கிறார். நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பாக்கெட் வரை சாப்பிட்டு வருகிறார்.

இது குறித்து ராமாவா கூறியதாவது:-

 எனக்கு இந்த பெஸ்கெட்டை தவிர வேறு எதுவும் உண்ண பிடிக்கவில்லை. ஒரு தடவை 4 முதல் 5 பிஸ்கெட்டுகள்  வரை சாப்பிடுவேன். இந்த பிஸ்கெட்  தனக்கு போதுமான அளவுக்கு திருப்தி தருகிறது. இந்த பிஸ்கெட்  தயாரிப்பு நின்று விட்டால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது என கூறுகிறார்.

மேலும் ராமாவா தாய் கூறியதாவது:-

சிறு வயதில் அவள் விரும்பினாள் என்பதற்காக வாங்கிக் கொடுத்தேன், அதுவே தற்போது அவளுடைய வாழ்க்கை என கூறுகிறாள். இவ்வாறு இவள் இருந்தால் எப்படி திருமணம் செய்து வைப்பது என சோகத்துடன் கூறினார். மேலும் தாங்கள் விவசாயம் செய்து வருவதால் மருத்துமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை எனவும் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...