News
Loading...

ஹஜ் பயணிளுக்கு அறிமுகபடுத்தப்பட்டுள்ள‌ ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார் குடை உள்ளிட்ட நவீன சாதனங்கள்

ஹஜ் பயணிளுக்கு அறிமுகபடுத்தப்பட்டுள்ள‌ ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார் குடை உள்ளிட்ட நவீன சாதனங்கள்

ரியாத்: உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கானோர் புனித ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனர். சவுதி அரேபியா அரசு இம்முறை யாத்திரிகர்களின்  பாதுகாப்பை உறுதி செய்யவும், புனித ஹஜ் பயணத்தை எளிதாக்கவும், கையில் கட்டும் வகையில்  மின்னணு காப்பு (ஸ்மார்ட் பிரேஸ்லெட்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் காப்பு மூலம் அதனை அணிந்திருக்கும் யாத்திரிகர்களின் விசா எண், பாஸ்போர்ட் எண், முகவரி, அவர்களது மருத்துவம் சார்ந்த தகவல்களை இதன் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். மேலும் ஐந்து வேளை தொழுகை நேரத்தையும், காலத்தையும் அறிவிக்கும் வகையில் ஒவ்வொரு வேளை தொழுகைக்கும் இந்த ஸ்மார்ட் பேண்ட் அலாரம் மூலம் அறிவித்து கொடுக்கிறது.

இந்த ஸ்மார்ட் வாட்சில் ஜிபிஎஸ் (GPS) வசதி உள்ளதால், குறிப்பிட்ட நபர் எங்கு தற்போது இருக்கிறார் என அறிந்து கொள்ளலாம். ஜிபிஎஸ் (GPS) வசதியுடன் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பாக அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டும் வசதியுமுள்ளது. ஆபத்து காலங்களில் உதவும் வகையில் முக்கிய தொலைபேசி எண்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட பாஸ்போர்ட் போன்று முக்கியமானதாக திகழ்கிற‌து. மேலும் வாட்ர் ரெசிஸ்டண்ட்” எனப்படும் நீரில் விழுந்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ எந்தவித பழுதும் எற்படாத வகையில் வடிவமைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் வழி தவறினாலோ அல்லது தங்களைது குழுவினரை தவற‌விட்டுவிட்டாலோ இந்த ஸ்மார்ட் பேண்ட் மூலம் எளிதில் தொடர்பு கொள்ளலாம். ஆபத்துக்காலங்களிலும், ஏதேனும் உதவி தேவை ஏற்படும் காலங்களிலும்  அரசு அதிகாரிகளை,  தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

மேலும், இந்த ஸ்மார்ட் பேண்ட் மக்கா மற்றும் மதீனாவின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும்  யாத்திரிகளுக்கான  ஹஜ் மற்றும் உம்ரா உரிமம், தங்கும் விடுதி போன்ற தரவும் அடங்கும். இந்த ஸ்மார்ட் வாட்ச் “வாட்ர் ரெசிஸ்டண்ட்” எனப்படும் நீரில் விழுந்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ எந்தவித பழுதும் எற்படாத வகையில் வடிவமைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனை லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை

அதோடு தனியார் நிறுவனம் ஒன்று சோலார் ஸ்மார்ட் குடையை அறிமுகபடுத்துயுள்ளது. வெயிலின் தாக்கத்தை உள்வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடையின் மூலம் மொபைல் போன் ரீசார்ஜ், டார்ச் லைட், வழிகாட்டும் வசதி உள்ளிட்டவையும் உள்ளது.

ஹஜ் பயணிளுக்கு அறிமுகபடுத்தப்பட்டுள்ள‌ ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார் குடை உள்ளிட்ட நவீன சாதனங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...