News
Loading...

பிரேசில் நாட்டில் நாய்களுக்கு ஒலிம்பிக் போட்டி

பிரேசில் நாட்டில் நாய்களுக்கு ஒலிம்பிக் போட்டி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனீரோவின் புறநகர் பகுதியான ரியோ பாரா டா டிகிகாவில் உள்ள டொகோ பார்க் கிளப்பில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிகல் ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் ரியோ டி ஜெனீரோவில் நாய்களுக்கான ஒலிம்பிக் போட்டியும் நடத்தப்பட்டது. பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஏராளமான நாய்கள் கலந்து கொண்டன.

குதித்தல், நீளம் தாண்டுதல், நீச்சல், ஓட்டம், ‘டைவ்’ அடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் அனைத்து ரக நாய்களும் பங்கேற்றன.

நாய்களின் வயது, அவற்றின் எடை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. தண்ணீரில் குதிக்கும் போட்டியில் 9 மாத மிமா என்ற குட்டி நாய் தங்க பதக்கம் பெற்றது.

நாய்களுக்கான ஒலிம்பிக் போட்டியை ஆண்டுதோறும் நடத்த அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...