News
Loading...

66-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை செய்யயுள்ளார்


குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 66-வது பிறந்தநாள் விழா பல்வேறு கின்னஸ் சாதனைகளுடன் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 17-ந்தேதி தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி குஜராத் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நவசாரி என்ற இடத்தில் 11 ஆயிரத்து 223 மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில், மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் ரூ.7½ செலவில் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது. உலகில் இதுவரை இவ்வளவு அதிக நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. எனவே, இது கின்னஸ் சாதனையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மேலும் 3 கின்னஸ் சாதனைகளும் நிகழ்த்தப்பட உள்ளன. விழாவில் ஒரே நேரத்தில் ஆயிரம் எண்ணெய் விளக்குகளை மாற்று திறனாளிகள் ஏற்றுகின்றனர். இது ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாகும்.

அமெரிக்காவில் 346 மாற்று திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது கின்னஸ் சாதனையாக உள்ளது. இங்கு ஆயிரம் பேருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. எனவே, இதுவும் கின்னஸ் சாதனையில் இடம்பெறும்.

இதே போல் ஆஸ்திரேலியாவில் 500 பேருக்கு ஒரே நேரத்தில் காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது கின்னஸ் சாதனையாக உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்படுகிறது. இதுவும் கின்னஸ் சாதனையில் இடம்பெறும்.

கடந்த ஜனவரி மாதம் பிரதமரின் வாரணாசி தொகுதியில் இதே போன்ற உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது 10 ஆயிரத்து 200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதுவும் கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால், போட்டோ, வீடியோ போன்ற உரிய ஆதாரங்கள் சேர்க்கப்படாததால் கின்னஸ் சாதனையில் அந்த நிகழ்ச்சி இடம்பெறவில்லை.

இப்போது அதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...