News
Loading...

130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்

130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்தி வரும் ராகவா லாரன்ஸ், அனாதை குழந்தைகளை தத்து எடுத்தும் வளர்த்து வருகிறார்.

அதேநேரத்தில், இவர் வணங்கும் ராகவேந்திரர் சுவாமிக்கு கோவில் கட்டி வரும் லாரன்ஸ், தன்னுடைய உயிருக்கும் மேலாக போற்றி வரும் தனது அம்மாவுக்காகவும் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வரும் ராகவா லாரன்ஸ் இதுமட்டுமில்லாது, இருதயத்தில் கோளாறுகளுடன் இருக்கும் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தும் வருகிறார். 

இந்நிலையில், நேற்று அபினேஷ் என்ற சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்துள்ளார். அந்த சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அபினேஷ், ராகவா லாரன்ஸ் உதவியால் மறுவாழ்வு கிடைக்கப்பெற்ற 130-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுவனுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை செய்து, மறுவாழ்வு கிடைக்கச் செய்த மருத்துவர்களுக்கு ராகவா லாரன்ஸ் நன்றிகளை தெரிவித்துள்ளார். 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...