News
Loading...

ரிலையன்ஸ்-ஏர்செல் நிறுவனங்கள் இணைந்தன

ரிலையன்ஸ்-ஏர்செல் நிறுவனங்கள் இணைந்தன

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவது குறித்து முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் தயார் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த ஒப்பந்தத்திற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிர்வாகக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இணைப்பு குறித்த அறிவிப்பை இரு நிறுவனங்களும் வெளியிட்டன. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாக இது கருதப்படுகிறது. 

இந்த இணைப்பின் மூலம், 19 கோடி வாடிக்கையாளர்களுடன் புதிய நிறுவனமானது மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும். முதலிடத்தில் ஏர்டெல் (25 கோடி), இரண்டாவது இடத்தில் வோடபோன் (19.8 கோடி) நிறுவனங்கள் உள்ளன. 

இணைக்கப்பட்ட புதிய நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடியாகவும் இருக்கும். கடனைப் பொருத்தவரையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடியாகவும், ஏர்செல் நிறுவனத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடியாகவும் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத்துறையில் அதிரடி அறிவிப்புகளுடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்துள்ள நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...