News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - தனுசு

புரட்டாசி மாத ராசி பலன் - தனுசு

17.9.2016 முதல் 16.10.2016 வரை

மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை

பதவி மாற்றங்களால் பலன் பெறும் நேரம்!

உடன் இருப்பவர் களையும் வாடவிடாமல் பார்த்துக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் 10–ல் சஞ்சரிக்கின்றார். 10–ல் குரு வந்தால் பதவி மாற்றம் என்பது பழமொழி. ஆனாலும் வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமைய வழிபாடுகள் கைகொடுக்கும். ஜென்மத்தில் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் கூடுதலாக வந்து இடையூறுகளை விளைவிக்கும். ஏழரைச் சனியிலும் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே குடும்பச் சுமை கூடுதலாக இருக்கும். 

இருப்பினும் முதல் சுற்று நடப்பவர்களும், மூன்றாவது சுற்று நடப்பவர்களும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி என்பதால் மங்கள ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உருவாகும். தங்குதடைகள் அகலும். தனலாபம் கூடுதலாக இருக்கும். குருவின் பார்வை 2–ம் இடத்தில் பதிவது யோகம் தான். வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் இடத்தைக் குரு பார்ப்பதால் செல்வாக்கு எப்போதும் போல இருக்கும். செயல்பாடுகளும், திட்டங்களும் வெற்றி பெறும். நல்வாக்குச் சொல்பவர்கள் உங்கள் அருகிலிருந்து வளர்ச்சிக்கும், மனஅமைதிக்கும் வழிகாட்டுவர்.

புத்திரகாரகன் என்று வர்ணிக்கப்படும் குரு வலிமை இழந்து சுக்ரனோடும், சூரியனோடும் கூடியிருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதியைக் குறைக்கலாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் குரு பிரீதி செய்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் இடத்தில் ராகுவும், முன்னேற்றத்தை வழங்கும் மூன்றாமிடத்தில் கேதுவும் இருப்பதால் நாகசாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது. 

ராசிநாதனாகவும், 4–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பரிவர்த்தனை யோகம் பெற்ற கிரகமான சூரியனோடு இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு இது உன்னதமான நேரமாகும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், நல்ல பதவிகளும் கிடைக்கும். சகோதர வர்க்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு கட்டுதல், கட்டிய வீட்டைப் பழுது பார்த்தல், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டும் வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக விரயச் சனியின் ஆதிக்க காலத்தில் வாகன மாற்றம் செய்வது நல்லது. பழைய வாகனங்களால் பழுதுச்செலவுகளும், சிக்கல்களும் ஏற்படலாம். ஒன்பதில் சஞ்சரிக்கும் ராகு உன்னத வாழ்வமைத்துத் தர வாரம் தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வதோடு நவராத்திரியில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

சுகம் தரும் சுக்ரப்பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி சுக்ரன் நீச்சத்திலிருந்து விடுபட்டுத் துலாம் ராசியில் அடியெடுத்து வைக்கின்றார். துலாம் ராசி சுக்ரனுக்குரிய சொந்தவீடாகும். இக்காலத்தில் வருமானப் பற்றாக்குறை அகலும். வாய்ப்புகள் வந்து அலைமோதும். தனக்கும் செலவிடுவீர்கள், தர்ம காரியத்திற்கும் செலவிடுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளிநாட்டு யோகம் கைகூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

உச்ச புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். தொழில் ஸ்தானம் எனப்படும் 10–ம் இடத்தில் ஸ்தானாதிபதி உச்சம் பெறும்பொழுது தொழில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் முன்வந்து சுயதொழில் தொடங்குவர். லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காக வந்து சேரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி முதல் 12–ம் இடத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். 6, 11–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தனாதிபதி சனியோடு இணையும் பொழுது வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். தேங்கிய காரியங்கள் விரைவில் நடக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளைப் பரிசீலிப்பீர்கள். மனக்குழப்பம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். இம்மாதம் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாட்டை மேற்கொள்வதோடு ராகு–கேது பிரீதி செய்வது நல்லது. 

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் செவ்வாய் பலம் நன்றாக இருப்பதால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும், உற்சாகத்தோடு வந்து உதவிசெய்வர். கடன் சுமை தீரும். கவலைகள் மாறும். இடம் வாங்குவதில், பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பர். கணவன்–மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சினையை சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாடும், துர்க்கை வழிபாடும் வெற்றியை வரவழைத்துக்கொடுக்கும்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:  செப்டம்பர் : 17, 18, 28, 29, அக்டோபர் : 2, 3, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்:  சிவப்பு

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.