News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - விருச்சிகம்

புரட்டாசி மாத ராசி பலன் - விருச்சிகம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை 

செல்வாக்கு உயரும் நேரம்!

லட்சத்திற்காக வாழும் மனிதர் களுக்கு மத்தியில் லட்சியத்திற்காக பாடுபடும் விருச்சிக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத்தொடக்கத்திலேயே தனாதிபதியாகவும், பஞ்சமாதிபதியாகவும் விளங்கும் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும் புகழும் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குரு சந்திரனைப் பார்த்து குருச்சந்திர யோகம் உருவாகும் விதத்தில் மாதம் தொடங்குவதால் மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் வாய்ப்பு உண்டு.

தொழில் ஸ்தானாதிபதியான சூரியன் லாப ஸ்தானத்திலும், லாப ஸ்தானாதிபதியான புதன் தொழில் ஸ்தானத்திலும் பலம் பெற்றும், பரிவர்த்தனை பெற்றும் இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசுவழிச் சலுகைகள் மற்றும் அரசாங்க வங்கிகளின் உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மற்ற கிரகங்களின் ஆதிக்கம் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மணமாலை சூடும் வாய்ப்பு கிட்டும். இடம், வீடு வாங்கும் யோகமும், வாங்கிய இடத்தில் வீடு கட்டும் அமைப்பும் வந்து சேரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இப்பொழுது குரு வீட்டில் சஞ்சரிக்கின்றார். குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் பலம்பெற்று இருக்கும் பொழுது குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செல்வாக்கு மேலோங்கும். செய்யும் தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வியாபார நலன் கருதி வெளியூர்ப் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். அதன் விளைவாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் திடீரென வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு உற்சாகத்துடன் செல்லும் அளவிற்கு உடல்நிலை இடம் கொடுக்கும். ஜென்மச் சனிக்கு பரிகாரமாக ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். நவராத்திரி விழாவில் துர்க்காஷ்டமி அன்று துர்க்கையையும், சரஸ்வதி பூஜையன்று கலைவாணியையும், விஜயதசமி அன்று ஆதிபராசக்தியையும் வழிபட்டு ஆனந்தமயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

சுகம் தரும் சுக்ரப்பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். சுக்ரன் தன் சொந்த வீட்டில் பலம் பெறுவது யோகம்தான். பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். வீடு மாற்றங்களும் உத்தியோக மாற்றங்களும் விரும்பும் விதத்தில் அமையும். வியாபார முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொள்வீர்கள். பண வசதி திருப்திகரமாக இருக்கும். அதிநவீன வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உச்ச புதனின் சஞ்சாரம்!

உங்கள் ராசியைப் பொறுத்தவரை அஷ்டமாதிபதி ஆனவர் புதன். அவர் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது யோகம் தான். வருமானம் இருமடங்காக உயரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகள் வழியிலும் வருமானங்கள் வந்து சேரும். இதுபோன்ற காலங்களில் சொத்துக்கள், வீடு வாங்கும் அமைப்பு உருவாகும். உங்கள் ராசிக்கு ஏற்ற விதத்தில் கட்டிய அமைப்புள்ள வீடு வாங்கினால் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டும். சாதகமான நேரம் இது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 12–ல் சஞ்சரிக்கும் பொழுது தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவழியே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தனித்தொழில் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பெண்வழிச் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இம்மாதம் ஜென்மச் சனிக்கு பரிகாரமாக சனிக்கிழமை தோறும் வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உங்கள் பெயரிலேயே இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் உருவாகும். தாய்வழி ஆதரவு கூடுதலாக இருக்கும். சகோதர வழியில் வருமானம் பெருகும். இல்லத்தில் இருந்தபடியே சம்பாதிப்பீர்கள். அரசு மற்றும் பொது நலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும், புகழ்கூடும். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பழைய ஆபரணங்களை கொடுத்துப் புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நவராத்திரி வழிபாட்டில் துர்க்கை, சரஸ்வதி, லட்சுமியை வழிபட்டு இனிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–   செப்டம்பர் 17, 18, 25, 26, 27, 30 அக்டோபர்: 1, 2, 8, 9, 10, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.