News
Loading...

விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட மர்முகாவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட மர்முகாவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளுடன் கூடிய முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் துறைமுகத்தில் தயாரிக்கப்பட்டு, ’மர்முகாவ்’  என பெயரிடப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், 7,300 டன் எடையை சுமந்தபடி 30 கடல்மைல் வேகத்தில் சென்று, எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. 

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களும் இதில் உள்ளது. இதே திறனுடைய விசாகப்பட்டினம் என்ற கப்பல் கடந்த 20-4-2015 அன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற மேலும் நான்கு போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை 2020-24 ஆகிய ஆண்டுகளில் இந்திய கடற்பகையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வகையிலான முதல் கப்பல் ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...