News
Loading...

தற்கொலை முயற்சி செய்த சுவாதி கொலையாளி ராம்குமார் மருத்துவமனையில் உயிரிழப்பு

தற்கொலை முயற்சி செய்த சுவாதி கொலையாளி ராம்குமார் மருத்துவமனையில் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையை உலுக்கிய இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸ் விசாரணைக்குப்பின் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் கூறப்பட்டது.

சிறிது நேரம் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராம்குமார் உயிரிழந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...