News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - ரிஷபம்

புரட்டாசி மாத ராசி பலன் - ரிஷபம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் வரை

குரு பார்வையால் குழப்பங்கள் அகலும்!

அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் அன்பிற்கு கட்டுப்படும் ரிஷப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே சகாய ஸ்தானாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே வருமானம் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்களிலும் நாட்டம் செல்லும்.  

அஷ்டமத்தில் செவ்வாய் அடியெடுத்து வைக்கின்றாரே என்று கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டாலும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இதற்கென்று உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நற்பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும். குரு வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் கெடு பலன்கள் குறைவாகவே இருக்கும்.

 குரு உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம் தான். குரு பார்வைக்கு பலன் அதிகம் உண்டு. எனவே இதுவரை நடைபெறாதிருந்த ஒருசில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும். 

வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது. ராசிநாதன் மாதத் தொடக்கத்திலேயே நீச்சம் பெற்றிருக்கின்றார். இருந்தாலும் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தோடு இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகின்றது. எனவே, துலாத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்
கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கையும், வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலங்கள் உருவாகும். 

பொதுவாக ராசிநாதன் சுக்ரன் என்றாலே பெண் தெய்வ வழிபாடுகள் தான் பெருமை சேர்க்கும் என்பார்கள். அதற்கு ஏற்ற விதத்தில் இந்த மாதத்தில் நவராத்திரி விழா வருகிறது. எனவே அன்னை பராசக்தியை அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று
9 நாட்களும் வழிபட்டு ஒளிமயமான எதிர்காலத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

இதுவரை நீச்சம் பெற்றுச் சஞ்சரித்து வந்த சுக்ரன் செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்குள் அடியெடுத்து வைக்கின்றார். அது அவருக்குச் சொந்த வீடாகும். சுக்ரன் பலம் பெறுவது யோகம் தான். எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். கடந்த காலத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் எல்லாம் இப்பொழுது நடைபெறும். இடையில் வந்த குறுக்கீடு சக்திகள் இப்பொழுது அகலும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். சொத்துப்பிரச்சினைகள் சுமுகமாக முடியும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். தனாதிபதி உச்சம் பெறும் நேரம் மிகுந்த அற்புதமான நேரமாகும். தொழிலும் வெற்றி நடைபோடும். உதிரி வருமானமும் வந்து சேரும். பிள்ளைகளின் உத்தியோக முயற்சிகளில் அனுகூலம் கிடைத்து வேலைக்குச் சேர்ந்து சம்பளத்தையும் உங்கள் கரங்களில் கொடுப்பர். இதுபோன்ற நேரங்களில் சுபவிரயங்களைச் செய்வது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக மேலும் நற்பலன்களைக் காண்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்
களால் அனுகூலங்கள் கிடைக்கும். வங்கிச் சேமிப்பு உயரும். உங்களைத் தூற்றியவர்களே உங்களைப் போற்றுவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். இம்மாதம் பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும். 

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் ஆரம்பத்தில் செலவுகள் கூடுதலாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக வருமானங்கள் வந்து சேரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். கற்றுக்கொண்ட கைத்தொழிலால் உதிரி வருமானங்கள் பெருகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். புதனின் பெயர்ச்சிக்குப் பிறகு மிகுந்த யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தாயின் தனவரவு தக்க விதத்தில் வந்து சேரும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றி பெறும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்க ஆதிபராசக்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: செப்டம்பர்:  17, 18, 23, 24, 28, 29  அக்டோபர் : 11, 12, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்ப்பச்சை

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.