News
Loading...

பெங்களூரில் வளர்ப்பு நாய்க்காக திருமணத்தை நிறுத்திய பெண்: மணமகன் திட்டியதால் ஆத்திரம்

பெங்களூரில் வளர்ப்பு நாய்க்காக திருமணத்தை நிறுத்திய பெண்: மணமகன் திட்டியதால் ஆத்திரம்

பெங்களூர் ஆர்த்தி நகரை சேர்ந்தவர் கர்ணிஷா வாலியா சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பின் இருவரும் தினமும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது கர்ணிஷா வாலியா தான் ஆசையாக வளர்க்கும்நாய் பற்றி அதிக முறை மணமகனிடம் பேசி கொண்டே இருந்தார்.

இது மணமகனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உடனே அவர், நாய்கள் என்றால் எனக்கு பிடிக்கும் ஆனால் நீ அதை பற்றியே பேசி கொண்டு இருப்பதால் உன்னை நினைத்தாலே நாய் ஞாபகம் தான் வருகிறது என்று பேஸ்புக்கில் பதில் அனுப்பினார். இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திருமணத்துக்கு முன்பே என் மீது ஆதிக்கம் செய்கிறீர்கள் நான் ஆசையாக வளர்க்கும் நாயை கேவலப்படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என்று கர்ணிஷா கோபமாக பதில் அனுப்பினார்.

மேலும் திருமணத்துக்கு பின்னும் வளர்ப்பு நாய் தன்னுடன் தான் இருக்கும் என்று கூறினார். அதற்கு மணமகன், இந்த பிரச்சனையை பேசி கொள்ளலாம். என் அம்மாவுக்கு நாய் என்றால் பிடிக்காது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணிஷா, உன் அம்மாவுக்கு நாய்கள் பிடிக்கவில்லை என்றால் எனக்கு என்ன? உன்னுடன் திருமணமே வேண்டாம். அதை நிறுத்திவிடலாம் என்று கூறிவிட்டார். இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...