News
Loading...

விஜய் 60-வது பட டைட்டீல் இன்று மாலை அறிவிப்பு

விஜய் 60-வது பட டைட்டீல் இன்று மாலை அறிவிப்பு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ஆரம்பம், சிவா இயக்கத்தில் அவர் நடித்த வேதாளம் ஆகிய இரண்டு படங்களின் டைட்டீல்களையும் அந்த படங்களின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருந்தபோது தான் அறிவித்தனர். அதேபோல் இப்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நடந்த நிலையில், இன்று மாலை படத்தின் டைட்டீலுடன் பர்ஸ்ட் லுக் அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.

இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே படத்தின் டைட்டீல் எங்க வீட்டுப்பிள்ளை, உங்க வீட்டுப்பிள்ளை, நம்ம வீட்டுப்பிள்ளை என பலவிதமாக யூகிக்கப்பட்டு இணையதளங்களில் வெளியாகி வந்தன. ஆனால் சமீபத்தில் இந்த டைட்டீல்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் டைட்டீல் வைக்க வாய்ப்பிருப்பதாக விஜய் வட்டாரம் தெரிவித்தது.

அதனால் விஜய்யின் ரசிகர்கள் பெரிய அளவில் உற்சாகமடைந்தனர். ஆனபோதும், நேற்றைய தினம் இன்று மாலை விஜய் 60வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாக அந்த படத்தை தயாரித்து வரும் விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அதை பெரிய அளவில் டிரண்ட் செய்ய இப்போதே ஆயத்த நிலையில் உள்ளார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...