News
Loading...

கோபம்

கோபம்

சங்கரன்பிள்ளை ஒரு கம்பனியின் நிர்வாக பொறுப்பு ஏற்றுகொண்டார்.

" சும்மா சோம்பி இருப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. வெளியே துரத்த படுவார்கள் " என்று முதல் நாளே மிரட்டினார்.

ஒரு நாள் மற்ற பணியாளர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஒருவன் மட்டும் சுவரில் சாய்ந்து நின்று இருப்பதை கவனித்தார்.

" ஏய், வா இங்கே ..! என்று கோபமாக அழைத்தார்.
அவன் பதறி வந்தான்.

" உன் சம்பளம் எவ்வளவு..? "
ஐயாயிரம் ரூபாய் , அய்யா..!
என்னுடன் வா...!

கோபத்துடன், கணக்கு பிரிவுக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் வாங்கி, அவனிடம் கொடுத்து, இந்த இரண்டு மாத சம்பளம். இனி உனக்கு இங்கே வேலை இல்லை என்றார்.

அவன் பதில் சொல்ல விரும்பியபோது, "வெளியே போடா" என்று விரட்டிவிட்டார்.

தான் கடுமையானவன் என்பதை நிருபித்த பெருமையில், ஒரு பணியாளனை கூப்பிட்டு... என்ன புரிந்து கொண்டாய்...? என்றார்.

" பிட்சா டெலிவரி செய்ய வந்தவனுக்கு, நீங்கள் நினைத்தால் கொழுத்த டிப்ஸ் கிடைக்கும் என்பதை" :))

விளக்கம் :-
கோபத்தில் இயங்கும்போது இப்படிதான் தாறு மாறாக முடிவுகள் எடுக்க நேரும்.
உங்களை நீங்கள் பெரிதாக எண்ணாமல், நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரத்துடன் இல்லாமல், இருந்தால் எந்த பிரச்சனை உங்களை கட்டி போட முடியும்?
பிரச்சனைகளின் விளைநிலம் உங்கள் குடும்பமோ , நிறுவனமோ அல்ல. உங்கள் மனம் தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...