News
Loading...

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி : குற்றாலத்தில் பரபரப்பு

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி : குற்றாலத்தில் பரபரப்பு

தென்காசி : குற்றாலம் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய மர்ம நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் பழைய குற்றாலம் விலக்கு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.  உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பணம் நிரப்ப வங்கி அதிகாரிகள் சென்றனர். அப்போது இயந்திரத்தின் மீது பச்சை கலரில் வித்தியாசமான பொருள் ஒன்று ஒட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகலறிந்து குற்றாலம் போலீசார் வந்து அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ஏடிஎம் மையத்துக்கு மதியம் ஒன்றரை மணிக்கு 2 இளைஞர்கள் வரும் காட்சி பதிவாகி இருந்தது.  அவர்கள் ஸ்கிம்மர் கருவியை பொருத்தினர். பிறகு, பணம் எடுப்பதற்கான ரகசிய குறியீட்டு எண்களை பதிவிடும் பகுதிக்கு மேல்பகுதியில் மிக நுண்ணிய அளவிலான கேமரா ஒன்றையும் பொருத்தினர். 

பிறகு இவர்கள் அதே ஏடிஎம் மையத்துக்கு 5 முறை வந்து சென்றது கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இங்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களது  கார்டை உள்செலுத்தும் போது அந்த கார்டில் உள்ள அனைத்து விவரங்களும்  அந்த கருவியில் பதிவாகி விடும். மேலும், மர்ம நபர்கள் பொருத்திய  ரகசிய கேமராவில் வாடிக்கையாளர் பதிவு செய்யும் ரகசிய எண்ணும் பதிவாகிவிடும். இதன்மூலம் அந்த அட்டைக்குரிய வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.  போலீசார் தனிப்படை அமைத்து  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...