News
Loading...

“பைரவா” அமெரிக்க தியேட்டர் உரிமை எத்தனைக்கோடி?

பைரவா

விஜய் நடிக்கும் பைரவா திரைப்படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமை 3.30 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடிக்கும் பைரவா திரைப்படத்தை பரதன் இயக்கிவருகிறார். பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்திவந்த படக்குழுவினர் இரண்டு தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி அன்று பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் அறிவித்தனர். ஆனால் அதற்கு முன்பே படத்தின் பெயர் வெளியே தெரிந்ததால், படக்குழுவினரால் படத்தின் பெயர் உறுதிசெய்யப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

பைரவா படத்தின் கேரள தியேட்டர் உரிமை ரூ.6.25 கோடிக்கு விற்பனையாகியுள்ள நிலையில், அமெரிக்க தியேட்டர் உரிமை ரூ.3.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...