News
Loading...

கத்தி படத்தின் இந்தி ரீமேக் இக்கா

ஏ ஆர் முருகதாசு

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஏ ஆர் முருகதாசும் ஒருவர். இவர் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் அகிரா . இதையடுத்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முருகதாஸ் தனது அடுத்த படம் பற்றி கூறினார். இதைதோடர்ந்து இப்படத்திற்கு இக்கா என்று தலைப்பு வைக்கப்பட உள்ளது. இந்தப்படம் அடுத்த வருடம் துவங்கயிருக்கிறது.

மேலும் முருகதாஸ் கூறியதாவது...." தற்போது தான் அகிரா படம் முடிவு அடைந்த நிலையில் என் கவனம் முழுவது இனி இக்கா படத்தின் மீதுதான். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும். இப்படத்தில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ஆனால் தற்போது அவர் பிஸியாக இருப்பதால் தான் படப்பிடிப்பு அடுத்த வருடம் தள்ளி போயிற்று " என்றார்.

இக்கா படம் தமிழில் நடிகர் விஜய் , நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடதக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...