News
Loading...

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருது

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருது

திரைப்படத்தில் வாழ்நாள் சாதனைக்காக சீன திரைப்பட நடிகர் ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

ஹாங்காங்கில் பிறந்த 62 வயதாகும் ஜாக்கிச் சான் சீன திரப்படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச் சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ”THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE” அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.