News
Loading...

மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர், போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் இருந்து லாரி மற்றும் கனரக வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மணல் கடத்திவந்த லாரியை போலீசார் மடக்கி நிறுத்தினர்.

ஆனால், டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி இன்ஸ்பெக்டர், போலீசார் மீது மோதும்படி வந்தார். சுதாரித்துக் கொண்ட அவர்கள் அங்கிருந்து சிதறி ஓடி தப்பினர். இதையடுத்து லாரி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து, பதிவு எண் மூலம் விசாரணை நடத்தி, மணல் கடத்த பயன்படுத்திய லாரியின் உரிமையாளர் லட்சுமணன் (37) என்பவரை கைது செய்தனர். லாரி டிரைவர் முனுசாமியை (32) போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...