News
Loading...

சேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள்: ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா?

சேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா

சேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயிலில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளாக அவை இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த மாதம் 9ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் சென்ற ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. அந்தப்பணம் அனைத்துமே பழைய மற்றும் கிழிந்த நோட்டுக்கள் ஆகும். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரையில் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்த சூழ்நிலையில் சேலத்தின் புறவழிச்சாலை இருக்கக்கூடிய வங்கி ஏடிஎம்களில் பழைய, கிழிந்த நோட்டுக்கள் வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் நிலையங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளில் புகார்கள் தெரிவித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்தது விசாரணை நடத்திய காவல் துறையினர் அந்த பணத்தை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்தது சிபிசிஐடி அதிகாரிகள் புதிய கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏடிஎம்களில் வந்த பணம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளாக என விசாரணை நடந்து வருகிறது. வங்கிக்கு பணம் எடுத்து செல்லக்கூடிய அந்த ஏஜென்சி மூலமாக பணம் மாற்றப்பட்டிருக்கலாமா அல்லது உண்மையிலேயே வங்கியில் இருந்து தான் பழைய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...