News
Loading...

சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன.

சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த  அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு உரிமை தரப்பட்டுள்ளது. சாலை விரி வாக்க பணிக்கு செலவிட்ட பணத்தை பெறும் வரை, ஆண்டுக்கு, 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனம், செலவுத் தொகையை வசூலித்து விட்டால், அதன்பின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

பல நிறுவனங்கள், முதலீட்டு தொகையை வசூலித்த பிறகும், கட்டணத்தை குறைக்க வில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏப்., மாதம், தமிழகத்தில், 21 சுங்கச்சாவடிகளில், 10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இதற்கு, அரசியல் கட்சிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் உட்படபலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மீதமுள்ள, சென்னை - கோல்கட்டா; கரூர் - திண்டுக்கல்; மதுரை - துாத்துக்குடி; நாமக்கல் - கரூர், புதுச்சேரி - திண்டிவனம்; தஞ்சாவூர் - திருச்சி; திருச்சி - கரூர் உட்பட, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல், கட்டண நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழகத்தில், முதல் முறையாக கட்டண குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...