News
Loading...

சுய தொழில் - பால் காளான்கள் வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி வாலிபர்

சுய தொழில் பால் காளான்கள் வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி வாலிபர்

இறைச்சிக்கு மாற்று உணவான, பால் காளான்கள் வளர்ப்பில், பட்டதாரி இளைஞர் ஆர்வம் காட்டி வருகிறார். பெரம்பலுார் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்தவர் அருள்ஜோதி, 25; டிப்ளமோ மெக்கானிக் பட்டதாரியான இவர், வேலைக்காக வெளிநாடு சென்றவர், தகுதிக்கேற்ற வேலை கிடைக்காததால், ஓராண்டுக்கு முன் ஊர் திரும்பினார். தன் வயலில், பால் காளான் வளர்ப்பில் ஈடுபட முடிவு செய்தார்.

வைக்கோல் கூண்டுகள் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில், 81,500 ரூபாய் மற்றும் சொந்தப் பணம் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், அரைவட்ட குடில் அமைத்து, காளான் வளர்ப்பு பண்ணையை உருவாக்கியுள்ளார். ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் இருந்து விதைகளை வாங்குகிறார். சோளத்தில் தயாரிக்கப்படும் காளான் விதைகள், 300 கிராம், 40 ரூபாய்க்கும், நெல் உமியில் தயாரிக்கப்படும் காளான் விதைகள், 300 கிராம், 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை, குடிலில் உள்ள வைக்கோல் கூண்டுகளில் துாவுகிறார். இதில் வளரும் காளான்கள், 30 நாட்களில் உணவு பொருளாக தயாராகி விடுகிறது. காளானில் கொழுப்பு சத்து இல்லாததால், சைவ பிரியர்கள் மட்டுமல்லாமல், அசைவ பிரியர்களும் காளானை, இறைச்சிக்கு மாற்று உணவாக பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இது குறித்து, அருள்ஜோதி கூறியதாவது: காளான் என்பது மண் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் காளான், பலதரப்பட்ட சூழல்களிலும் வளரக்கூடியது. எப்போதாவது மழை பெய்தால், அபூர்வமாக முளைக்கும் காளான்களை, சமைத்து உண்பதில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள், இன்று அசைவ உணவுக்கு மாற்றாக பயன்படுத்துவது அதிகரித்துஉள்ளது. இதில் சிப்பி காளான், பால் காளான், பட்டன் காளான் என, ஆயிரக்கணக்கான வகைகள் இருந்தாலும், சிப்பி, பால் காளான்களுக்கு மட்டுமே மவுசு அதிகம். நட்சத்திர ஓட்டல்களில், ஆடம்பர உணவாக இருந்த காளான்கள் இப்போது, நடுத்தர ஓட்டல்களிலும் சாதாரண உணவாக மாறிவிட்டது. வெளியில் வாங்கும் விதைகளை, விரைவில் நானே உற்பத்தி செய்ய உள்ளேன். 300 கிராம் விதையில், 2.5 முதல் மூன்று கிலோ வரை உற்பத்தியாகிறது.

வினியோகிப்பு : இங்கிருந்து சென்னை, சேலம், கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பால் காளான்கள் அனுப்பப்படுகின்றன. மேலும், பெரம்பலுார் உழவர் சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட், சூப்பர் மார்க்கெட் முதல் தனித்தனி காய்கறி கடைகளுக்கும் வினியோகிக்கப்படு
கிறது. 200 கிராம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலித்தீன் கவரால் மூடி பாதுகாப்பாக பார்சல் செய்து அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...