News
Loading...

திருப்பத்தூர் அருகே பயங்கரம் அரசு பஸ்சில் ராடு உடைந்து கழன்று ஓடிய டயர்கள்

திருப்பத்தூர் அருகே பயங்கரம் அரசு பஸ்சில் ராடு உடைந்து கழன்று ஓடிய டயர்கள்

திருப்பத்தூர் அருகே நடுரோட்டில் அரசு பஸ்சின் இரும்பு ராடு திடீரென உடைந்து டயர்கள் கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று மதியம் வந்தது. பஸ்சை கிருஷ்ணகிரியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டி வந்தார். பகல் 12 மணியளவில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பிடிஓ அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க இரும்பு ராடு உடைந்து 4 டயர்களும் கழன்றது. 

இதனால் தாறுமாறாக தரையில் உராய்ந்தபடி ஓடிய பஸ் சாலையோரத்தில் சாய்ந்து நின்றது. உடனே பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். பின்னர் பஸ்சில் இருந்து அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.  இதில் லேசான காயமடைந்த சில பயணிகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.