
பெல்காம் அழகியான ராய் லட்சுமி கற்க கசடற படத்தில் அறிமுகமாகி 10 வருடங்களில் தென்னிந்திய மொழிகளில் 50 படங்களை நெருங்கி விட்டார். ஆனாலும் தமிழில் அவரால் நிலையான இடத்தை பிடிக்கமுடியவில்லை. தற்போதுகூட அவருக்கு தமிழில் கைவசம் படம் இல்லை. லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் அவ்வளவுதான். ஆனால் இந்தியில் ஜுலி 2 படத்தில் நடிக்கிறார், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிராவில் தமிழில் உமா ரியாஸ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். மலையாளத்தில் அரேபியன் சபாரி, சந்தோஷாயி கோபியட்டா என்ற படத்திலும் நடிக்கிறார். ஆனால் தமிழ்தான் அவருக்கு சரிவரவில்லை.
இதனால் தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது மிகவும் கவர்ச்சியான உடையணிந்து வந்தார். இந்தப்போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.