News
Loading...

பத்திரிகையாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை அணுகி எந்தக் கேள்வியையும் கேட்பதில்லையே?

பத்திரிகையாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை அணுகி எந்தக் கேள்வியையும் கேட்பதில்லையே?

எதிர்க்கட்சித் தலைவர்களையே சுற்றி சுற்றி வந்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை அணுகி எந்தக் கேள்வியையும் கேட்பதில்லையே?
எதிர்க்கட்சித் தலைவர்களைத்தான் பத்திரிகையாளர்களால் எளிதில் அணுக முடிகிறது; நினைத்த கேள்விகளைக் கேட்க முடிகிறது. ஆனால் “பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே ஜெயலலிதா தவிர்த்து விட்டாரே” என்ற ஒரு கேள்விக்கு, “ஜூனியர் விகடன்” இதழ் இன்று எழுதியுள்ள பதிலில், “அதிகாரிகளிலேயே ஒரு சிலரை - அமைச்சர்களிலேயே ஒரு சிலரை மட்டும்தான் ஜெயலலிதா சந்திக்கிறார். அவரிடம் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லையே என்று வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? சென்னை வந்த ஜனாதிபதியையே சந்திக்கவில்லை, இதற்காக ஜனாதிபதி வருத்தப்பட்டு இருப்பாரா என்ன? “உங்களுக்கும், எனக்கும் ஓர் ஒப்பந்தம் வைத்துக் கொள்வோம்; செவ்வாய்க்கிழமைதோறும் நான் உங்களைச் சந்திக்கிறேன்” என்று 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் ஜெயலலிதா சொன்னார். அதன்பிறகு இரண்டு முறை பத்திரிகையாளர்களைப் பார்த்திருப்பார். அவ்வளவுதான்” என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டு காலண்டரில் செவ்வாய்க்கிழமையே இடம் பெறவில்லை போலும்! செவ்வாய் இடம் பெற்றாலும், எந்தப் பதிலும் கிடைக்கப் போவதில்லை; வெறுவாய்தான்! ஜனநாயகத்தைப் பற்றிய கவலை இருந்தால் அல்லவா, அதன் நான்காம் தூணான பத்திரிகைகளைப் பற்றிய கவலை வரும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.