News
Loading...

தடையை மீறி அலுவலக நேரத்தில் ஓணம் கொண்டாட்டம்

தடையை மீறி அலுவலக நேரத்தில் ஓணம் கொண்டாட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில், தடையை மீறி தலைமை செயலகத்தில், காங்., சார்பில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு நடக்கிறது. கேரள மாநிலத்தின் முக்கிய விழாவான, ஓணம் பண்டிகை, வரும், 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. கேரளாவில், அரசு அலுவலகங்களில், ஓணம் பண்டிகையை கொண்டாட, கேரள அரசு தடை விதித்தது. குறிப்பாக, 'அலுவலக நேரத்தில், ஓணம் கொண்டாடக் கூடாது' என, உத்தரவிட்டது.

இதுபற்றி, முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே கூறுகையில், 'அரசு அலுவலகங்களில், அலுவலக நேரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடு வது சரியல்ல; விடுமுறை நாளிலோ அல்லது அலுவலக நேரம் முடிந்த பின்போ, ஓணம் கொண்டாடலாம். குறிப்பாக, அலுவலகத்தில் பூக்கோலம் போட்டு, மக்கள் நடப்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது' எனக்கூறியிருந்தார்.

கேரள அரசின் இந்த உத்தரவுக்கு, காங்., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில், காங்., ஆதரவு ஊழியர்கள் அமைப்பு சார்பில், நேற்று, ஓணம் கொண்டாடப்பட்டது. ஐந்து இடங்களில் பூக்கோலம் இட்டு, விழாவை அவர்கள் கொண்டாடினர்; காலை, 8:00 மணிக்கு துவங்கிய விழா, காலை, 10:45 மணிக்கு தான், நிறைவு பெற்றது.

இதுபற்றி, ஊழியர் சங்கத்தின் தலைவர் பென்சி கூறுகையில், ''பூக்கோலம் போடும் பணியை, காலை, 8:00 மணிக்கு துவங்கினோம்; 10:45 மணிக்கு தான் முடிந்தது; ''மாலையில், 5:45 மணி வரை வேலை செய்து, இதை சரிகட்டி விட்டோம். ஓணம் கொண்டாட, அரசு விதித்த தடையை ஏற்க முடியாது. எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே, ஓணம் கொண்டாடினோம்,'' என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...