News
Loading...

போலீசாரை ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம் - நீதிபதி ஜெயச்சந்திரன்

நீதிபதி ஜெயச்சந்திரன்

கோவை: புலன் விசாரணை சரியில்லாத காரணத்தினால் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பலர் விடுதலையாகின்றனர் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கவலை தெரிவித்தார். 

கோவையில் நடந்த மேற்கு மண்டல புலனாய்வு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் பேசுகையில், சரியான தீர்ப்புகளை கோர்ட்டால் மட்டும் வழங்க முடியாது. போலீசாரின் பங்கு மிக அவசியமானது. வழக்குகளில் சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் , முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் , குற்றப்பத்திரிகை தாக்கல் சரியான முறையில் இருக்க வேண்டும். இது தவறும் பட்சத்தில் வழக்குகள் விடுதலையாகிறது. இதற்கு புலனாய்வு சரியில்லாததே காரணம். 

இந்த நிலை தொடரும் போது மக்கள்,கட்டப்பஞ்சாயத்தை நாடி செல்ல வேண்டியதாகி விடும். இதில் மாற்றம் கொண்டு வர போலீசாருக்கு ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம். இதன் மூலம் கொலை, கொள்ளை துப்பு துல்லியமாக இருக்க முடியும். போலீசார் தொழில்நுட்பம், புதிய சட்டம் , புதிய தீர்ப்கள் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு சிறப்பாக செயல்படும் போது உண்மையான நீதி கிடைக்க வழி பிறக்கும் இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் பேசினார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...