News
Loading...

இரு மாநில போக்குவரத்து முடங்கியதால் வறுமையால் தவிக்கும் கூலி தொழிலாளிகளின் குடும்பம்

இரு மாநில போக்குவரத்து முடங்கியதால் வறுமையால் தவிக்கும் கூலி தொழிலாளிகளின் குடும்பம்

காவிரி விவகாரத்தால் போக்குவரத்து முடங்கியதையடுத்து தினக்கூலி தொழிலாளர்கள் குடும்ப நடத்த முடியாமல் தவித்து வருவதாக பெங்களூரு வாசிகள் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அத்திபள்ளி எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்ற போதும், வாகன போக்குவரத்து முடங்கியதால் அதை நம்பி வாழ்க்கை நடத்தும், கூலி தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 

சமீப நாட்களாக தமிழகத்தில் இருந்து தனியார் பஸ்கள் மட்டும் பெங்களூரு வந்து செல்கிறது. அப்படி இருக்கையில் அரசு பஸ் மற்றும் சரக்கு லாரிகள் ஏன் பெங்களூருவிற்கு இயக்க கூடாது.இதனால் சாம்ராஜ்பேட்டை உள்பட பல்வேறு மார்க்கெட்டுகளில் வேலை பார்த்து வரும் கூலி தொழிலாளர்கள், இயல்பு வாழ்க்கையை தொலைத்துவிட்டனர். லாரி உரிமையாளர்கள் போக்குவரத்து முடங்கியதால், வாகனம் வாங்கியதிற்கு செலுத்தவேண்டிய மாத தவணைக்குக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கு ஒட்டுமொத்த மீடியாக்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து, தமிழகத்தில் இருந்து, கர்நாடத்திற்கு, இங்கிருந்து தமிழகத்திற்கு லாரிகள், அரசு பஸ்கள் இயக்க வழிவகை செய்யவேண்டுமென்று கேட்டுகொண்டுள்ளனர்.

இது குறித்து சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது; அவசரமாக சொந்த ஊருக்கு செல்லவேண்டுமென்றால், பஸ் வசதிகள் இல்லை. இதனால் ஒரு மாத காலமாக உறவினர்கள், பெற்றோர்கள், குடும்பத்தினரை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதால், கூலி தொழிலை நம்பியிருந்தவர்கள், இயல்பு வாழ்க்கை இழந்து விட்டனர். அவர்களின் வாழ்க்கை ஒளிவிளக்கு ஏற்றும் வகையில் இரு மாநில அரசு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, வாகனங்களை இயக்க அனுமதி கொடுக்கவேண்டுமென்று கேட்டு கொண்டுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.