News
Loading...

தி.மு.க., செயலர் செல்வராஜ் கொலையில் சென்னை கூலிப்படை கைது

தி.மு.க., செயலர் செல்வராஜ் கொலையில் சென்னை கூலிப்படை கைது

விழுப்புரம் : தி.மு.க., நகர செயலர் கொலை வழக்கில், சென்னை கூலிப்படையினர், ஆறு பேர் உட்பட, 11 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் நகர, தி.மு.க., செயலர் செல்வராஜ், 44. இவர், செப்., 14ல், நடைபயிற்சிக்கு சென்ற போது, மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்ததில், கூலிப்படை மூலம் கொலை நடந்தது தெரிய வந்தது.

பழிக்கு பழி : கடந்த, 2015, ஏப்., 21ல், விழுப்புரத்தைச் சேர்ந்த, ரவுடி பத்தர் செல்வத்தை, ரவுடி அறிவழகன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொலை செய்தனர். இதில், தி.மு.க., நகர செயலர் செல்வராஜுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால், தன் நண்பர் பத்தர் செல்வம் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில், விழுப்புரத்தைச் சேர்ந்த, ரவுடி இருசப்பன் திட்டமிட்டு, செல்வராஜை கொலை செய்து தெரியவந்தது.

சிறையில் திட்டம் : கடலுார் சிறையில், ஆயுள் கைதியாக இருக்கும் ரவுடி இருசப்பன், அதே சிறையில் இருக்கும் கூலிப்படை தலைவன், சென்னை, எண்ணுாரைச் சேர்ந்த, தனசேகர் உதவியை நாடியுள்ளான். தனசேகர், தன் தம்பி ரஞ்சித் தலைமையில் கூலிப்படை அமைத்து, செல்வராஜை கொலை செய்துள்ளான். இக்கொலை தொடர்பாக, ரவுடி இருசப்பன் மகன் அப்பு, 25, சென்னை கூலிப்படையினர் ஆறு பேர் உட்பட, 11 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம், இரு கார்கள், இரு பைக்குகள், ஏழு அரிவாள், 11 நாட்டு வெடிகுண்டுகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர், சென்னை, திருவான்மியூரில் நடந்த, 95 லட்சம் ரூபாய் கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.