News
Loading...

களை கட்டும் நவராத்திரி திருவிழா: ஆடல், பாடல் என நவராத்திரி விழா அமர்க்களம்

களை கட்டும் நவராத்திரி திருவிழா: ஆடல், பாடல் என நவராத்திரி விழா அமர்க்களம்

குஜராத்: யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல நவராத்திரி பண்டிகை வருவதற்கு முன்னே அதற்கான கொண்டாட்டங்கள் வடமாநிலங்களில் களைக்கட்டியுள்ளது. நவராத்திரி பண்டிகையை ஒட்டி வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கஃபா நடனம் ஆடுவது வழக்கம். பாரம்பரிய உடை அணிந்து இந்த நடனம் ஆடப்படும். 

இதற்காக குஜராத் மாநில ராஜ்கோட்டில் புது புது ஆடைகள் சந்தைக்கு வந்துள்ளன. பழமையான பண்டிகை என்றாலும் புதுமையும் கரம் கோர்த்துள்ளது. நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் பெண்கள் டாட்டூ என்ற உடல் ஓவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

 இந்திய-பாகிஸ்தான் கொடி மற்றும் மயில் என ஓவியங்களை வரைந்து கொள்கிறார்கள். நவராத்திரி விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10-வது நாள் வெற்றி திருநாளாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என்ற வெவ்வேறு பெயர்களில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.   

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.