News
Loading...

ட்விட்டரில் மக்கள் புகார் செய்யலாம் உபி காவல்துறையில் அறிமுகம்

ட்விட்டரில் மக்கள் புகார் செய்யலாம் உபி காவல்துறையில் அறிமுகம்

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகாணும் வகையில் காவல்துறையில் ட்விட்டர் புகார் சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு முக்கியமான துறைகளான வெளியுறவுத் துறை, ரயில்வே மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் சமூக இணையதளமான ட்விட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், அதற்கு தீர்வு காணும் வகையிலும் காவல் துறையில் ட்விட்டர் புகார் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இச்சேவையை துவக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. 

டிஜிபி ஜாவீத் அகமத், ட்விட்டர் துணை தலைவர் ரிஷி ஜெட்லி, சிஇஓ  ரஹில் குர்ஷித் ஆகியோர் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச காவல்துறையில் ட்விட்டர் புகார் சேவையை துவக்கி வைக்கின்றனர். 

பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு ட்விட்டர் மூலமாக தகவல் அளிக்கலாம். இதுகுறித்து போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...