News
Loading...

வரலாற்றில் இன்று... சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம்

வரலாற்றில் இன்று... சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் பிறந்தார்.

இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் பிறந்த இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 ஆம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் 15 ஆம் வண்வெளி பயணத்தில் இணைந்தார். 195 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து அதிக நேரம் விண்வெளி பயணம் செய்த பெண் என்ற பெருமை இவரைச் சேரும்.

அமெரிக்காவின் ஒஹைய்யோவில் பிறந்த வில்லியம்ஸ் மசாச்சூசெட்ஸ் உள்ள நீடாம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1983 இல் தேர்ச்சி பெற்றார். இதை தொடர்ந்து 1987 இல் அமெரிக்க கப்பற்படை அகாதமியில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். இதையடுத்து 1989 இல் அமெரிக்க கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், கப்பல்படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பின் தனது முதுகலைப் பட்டத்தை 1995 ஆம் ஆண்டு புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பெற்றார்.

இதை தொடர்ந்து நாசாவால் ஜூன் 1998 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம்ஸ் தனது பயிற்சியை ஆகஸ்ட் 1998 இல் துவங்கினார். அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டில் இருந்து நாசாவின் வெண்வெளி வீரர் அலுவலத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். பல விண்வெளி வீரர்களை போல வில்லியம்சும் ஒரு உரிமம் பெற்ற அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஐ.எஸ்.எஸ் வில்லியம்ஸ் தன்னுடன் எடுத்துச் சென்ற சொந்த பொருட்களில் ஒரு பகவத் கீதை பத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் இருந்தன.

சுனிதா வில்லியம்ஸ் நேவி கமெண்டேஷன் விருது இருமுறையும், நேவி, மரைன் கார்ப்ஸ் சாதனை விருது மற்றும் மனிதாபிமான சேவை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.