News
Loading...

மலேரியா இல்லாத நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

மலேரியா இல்லாத நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

மலேரியா இல்லாத நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு இலங்கை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மாலத்தீவை மலேரியா இல்லாத நாடாக அறிவித்திருந்தது.
இந்தியாவை விட 4 மடங்கு அதிக மழை பெய்யும் நாடு இலங்கை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கடந்த வாரம் பெய்த மழையால் இந்தியாவில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவி வரும் நிலையில், இலங்கைக்கு மலேரியா இல்லா நாடு என்ற அங்கீகாரத்தை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது பலரையும் வியப்பு அடைய செய்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் டெங்கு போன்ற நோய்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இலங்கை 60 ஆண்டுகளுக்கு முன் மலேரியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  கடந்த 4 ஆண்டுகளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசு ஒழிப்பு மற்றும் மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சி இலங்கையை மலேரியா இல்லா நாடாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...