News
Loading...

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் இதழ்  அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் இதழ் 2016ம் ஆண்டுக்கான முதல் 100 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை தொகுத்து  வெளியிட்டுள்ளது. இதில் டாப் 100 இடங்களை பிடித்துள்ள கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.25.5 லட்சம் கோடியாகும். இந்த சொத்து மதிப்பு  கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். அவரது  சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு  ரூ.1.2 லட்சம் கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது.  இதனால் 9வது ஆண்டாக முகேஷ் அம்பானி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2ம் இடம் சன்பார்மா குழுமத்தை சேர்ந்த திலிப் சங்வி தக்கவைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி. போர்ப்ஸ் பட்டியலில் 3ம் இடத்தை  ரூ.1.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பிடித்திருப்பவர் இந்துஜா சகோதரர்கள்.  4ம் இடத்தை ரூ.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவனத்தின்  அஜிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிவடைந்துள்ளார். 5ம் இடத்தை பல்லோன்ஜி பிஸ்திரியும், 6வது இடத்தை லட்சுமி  மிட்டலும், 7வது இடம் கோத்ராஜூம், 8வது இடம் சிவ் நாடாரும், 9வது இடத்தை குமார் பிர்லாவுக்கும், 10வது இடத்தை சைரஸ் பூனவாலாவும்  பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக நுழைந்திருப்பவர் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா. யோகா குரு ராம்தேவுக்கு  நெருக்கமான பாலகிருஷ்ணா, ரூ.16,750 கோடி சொத்து மதிப்புடன் 48 வது இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி இந்த  பட்டியலில் 32வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.22,780 கோடியாகும். இதற்கு முன்பு அவர் 29வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த ஆண்டு 3 இடங்கள் சரிந்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.