News
Loading...

ஜெ., சொத்துகுவிப்பு வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் தகவல்

ஜெயலலிதா

டெல்லி : ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் அடுத்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வருமானத்தை விட ரூ.66 கோடி ரூபாய் ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. ஜெயலலிதா மேல்முறையீட்டை அடுத்து தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு மனுவின் மீதான விசாரணை கடந்த மாதம் முடிந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...