News
Loading...

அதிவேக ரயில்களுக்கான கட்டணம் நாளை முதல் உயர்வு

அதிவேக ரயில்களுக்கான கட்டணம் நாளை முதல் உயர்வு

புதுடெல்லி: அதிவேக ரயில்களுக்கான கட்டணம் நாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகின்றன. இதன்படி ராஜ்தானி, தூரந்தோ, சதாப்தி ரயில்களின் கட்டணம் உயருகிறது. இந்த ரயில்களின் மொத்த டிக்கெட்டுகளில் 10 சதவீதம் விற்று தீர்ந்தவுடன் எஞ்சிய டிக்கெட்டுகளின் விலை 10 சதவீதம் அதிகமாகும். கடைசி 10 சதவீதத்தின் டிக்கெட்டுகளின் விலை இருமடங்காக அதிகரிக்கும். இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. 

ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்களிடம் ஆதரவும், எதிர்ப்பும் சேர்ந்தே காணப்படுகிறது. விமான டிக்கெட் பாணியை கடைபிடித்து ரயில் டிக்கெட் விலையிலும் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

50 சதவீத உயர்வு

இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், சேர் கார் எனப்படும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவற்றுக்கு கட்டண உயர்வு அதிகபட்சம் 50 சதவீதமாகவும், மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டண உயர்வு அதிகபட்சம் 40 சதவீதமாகவும் இருக்கும். ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், எக்சிகியூட்டிவ் வகுப்பு ஆகியவற்றுக்கு தற்போதைய கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுதவிர, முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம், உணவு கட்டணம், சேவை வரி போன்ற இதர கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...