News
Loading...

மின்திருட்டு புகார்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம் : பிஎஸ்இஎஸ் அறிவிப்பு

மின்திருட்டு புகார்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்

மின்திருட்டு தொடர்பான புகார்களை நுகர்வோர் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கும் வசதியை பிஎஸ்இஎஸ் மின்விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது. நகரில் மின்சாரம் திருடப்படுவது வாடிக்கயாக உள்ளது. இதுபோன்ற செயல்களால் டிஸ்காம் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, உள்ளூரில் குறிப்பிட்ட பகுதிகளில்மின்தடை ஏற்படவும் காரணமாகிறது. எனவே மின்திருட்டை தடுக்க பிஎஸ்இஎஸ் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மின்சாரம் திருடப்படுவது குறித்து தெரியவந்தால் நுகர்வோர்கள் அவற்றை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து ஆதாரத்துடன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கலாம். இதற்காக பிஎஸ்இஎஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த புகார் எண்ணை அறிவித்துள்ளது.  இதன்படி, பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்கு டெல்லி நுகர்வோர்கள்  9555010022 என்ற எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம். 

அதேேபான்று கிழக்கு மற்றும் மத்திய டெல்லியை சேர்ந்த நுகர்வோர்கள் 8588892156 என்ற எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்.  முதல்கட்டமாக வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பும் வசதியை அதிக மின்திருட்டு நிலவும் பகுதிகளில் செயல்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புகார் தெரிவிப்போர் பற்றிய விவரங்களை ரகசியமாக வைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.