News
Loading...

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

‘‘விமான நிலையம் முதல் சின்னமலை வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஜெயலலிதா வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கொடி அசைத்து வைத்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கலந்து கொண்டார். விமான நிலையத்தில் இருந்த காட்சிகள் கோட்டையிலும், கோட்டையில் நடக்கும் காட்சிகள் விமான நிலையத்திலும் தெரியும்படி பெரிய திரைகள் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலைய டி.வி. திரையில் ஒரு காட்சி சில வினாடிகள் மட்டுமே மறைந்து போனதை சிலர்தான் கவனித்தார்கள். அதுதான் அப்போலோ மருத்துவமனைக்குப் போக ஆரம்ப விதை’’ 

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

‘‘மெட்ரோ ரயில் திட்டத் தொடக்க விழா முதல்வர் சேம்பருக்கு அருகே ஒரு அறையில் நடைபெற்றது. அந்தக் அறைக்கு வருவதற்காக ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவை திறந்தபோது தூரத்தில் ஜெயலலிதா வீல் சேரில் வருவதுபோல தெரிந்தது. இந்தக் காட்சி விமான நிலைய ஸ்கிரீனில் சில வினாடிகள் வந்து மறைந்தன. கடந்த ஓராண்டாகவே நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா உட்கார்ந்துதான் பேசுகிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இருந்து இது தொடர்கிறது. சட்டசபையிலும் நிகழ்ச்சிகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் இருக்கையில் அமர்ந்து கொண்டுதான் பேசுகிறார். அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதைத்தான் இது காட்டியது. ஆனால், சமீப காலமாக நடப்பதற்கு ஜெயலலிதா ரொம்பவே சிரமப்பட்டார். சமீபத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற போது நிறையப் பேருக்கு விருதுகள் கொடுத்தார் ஜெயலலிதா. அடுத்தடுத்து விருதுகள் தரப்பட்டதால் கொஞ்ச நேரம் இருக்கையில் அமர்ந்துவிட்டுத்தான் விருதுகள் வழங்கினார். நிற்க முடியாத நிலையில் அருகில் இருந்த கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் நின்றார். நிகழ்ச்சியின் மேடைக்கே ஜெயலலிதாவின் கார் வரும் வகையில்தான் ஏற்பாடுகள் செய்தார்கள். ஆர்.கே. நகரில் நடந்த நிகழ்ச்சியில் மேடைக்கு வருவதற்கே லிஃப்ட் அமைத்தார்கள். லேண்ட் க்ருஸர் காரைதான் ஜெயலலிதா பயன்படுத்துகிறார்.  அந்தக் காரின் தளம் ரோட்டில் இருந்து 8.8 இஞ்ச் உயரம். சுமார் முக்கால் அடி உயரத்தில் காலை தூக்கிவைத்துதான் அந்த காரில் ஏற முடியும். ஜெயலலிதா ஏறுவதற்கு வசதியாக இரண்டு அடுக்கு கொண்ட ஸ்பெஷல் படிக்கட்டை ரெடி செய்து வைத்திருக்கிறார்கள். அந்தப் படிக்கட்டு ஜெயலலிதா காரிலேயே பயணம் ஆகும். அவர் இறங்கும்போதும், காரில் ஏறிச் செல்லும் போதும் அந்தப் படிக்கட்டை தூக்கி வைப்பார்கள். அதைப் பயன்படுத்தித்தான் ஜெயலலிதா காரில் ஏறுவார், இறங்குவார். இது எல்லாமே ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள். இப்போது நடப்பதற்கே சிரமமாக இருப்பதால்தான் வீல் சேரை உள்ளுக்குள் பயன்படுத்துகிறார் எனச் சொல்கிறார்கள்.’’

‘‘ஓஹோ’’

‘‘மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் ஜெயலலிதாவோடு தலைமைச் செயலாளர் பி.ராமமோகன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜப்பான் தூதர் சைஜி பாபா, ஜைகா நிறுவன தலைமைப் பிரதிநிதி டகேமா சுகமோடோ, துணை தலைமைப் பிரதிநிதி ஹிரோஷி யோஷிடா, தமிழக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தபோது அதை நாற்காலியில் அமர்ந்தபடியேதான் ஜெயலலிதா வாங்கினார். அதாவது, மெட்ரோ ரயில் திட்ட நிகழ்ச்சியில் இருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லை. அடுத்த நாள் கோட்டையில் மருத்துவப் புத்தகங்கள் வெளியீடு, அதானி நிறுவனத்தின் சூரிய சக்தி மின்சாரம், தாலிக்குத் தங்கம் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்பிறகு இரவு போயஸ் கார்டனில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இப்படித் தொடர்ந்து பணியாற்றியதால் சோர்வடைந்தார். 

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

அதன்பிறகு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகள் பிரபாவின் கணவர் சிவக்குமார் டாக்டராக இருக்கிறார். அவர்தான் மருத்துவர்களுடன் உடனே வந்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்த்தால் நல்லது என அவர்கள் சொன்ன பிறகுதான் அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் அழைத்துப் போயிருக்கிறார்கள்.’’ ‘‘மருத்துவமனைக்கு அவர் போனதே ஆச்சர்யம்தான்.”

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

‘‘எந்த நிலையிலும் மருத்துவமனையின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் முதல்வர். அவரையே அட்மிட் ஆகும் நிலைக்கு அவர் உடல்நிலை தள்ளியிருக்கிறது. முதல்வர் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது தளம் பிக் ஷாட்டுகள் மட்டுமே தங்குவார்கள். ஸ்டார் ஓட்டல் தரத்தில் ஒவ்வொரு அறையும் சூட் போல இருக்கும். அந்தப் பகுதியில் இருந்த அத்தனை சூட்டுகளும் முதல்வருக்காக ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டன. பெட், தலையணை, மருந்து உபகரணங்கள் என எல்லாமே புத்தம் புதிதாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பாத்ரூம் டைல்ஸ், டாய்லெட் என அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆர்.ஓ. வாட்டரும் அமைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை உணவை அவர் சாப்பிடவில்லை. வீட்டில் இருந்துதான் உணவு வருகிறது. பக்கத்து சூட்டுகளில் சசிகலா குடும்பத்தினரும் கார்டனுக்கு நெருக்கமானவர்களும் மட்டுமே இருக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் உள்ளே போய் வருவது எல்லாம் சும்மாதான். இரண்டாவது தளத்துக்குள் அவர்கள் போக முடியவில்லை. கார்டனில் எப்படி உள்ளே போய் அங்கே இருக்கிற அலுவலகத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு வருவது போலவே அப்போலோவிலும் அரங்கேறியது. இதுவரையில் கட்சிக்காரர்கள் ஒருவரைக்கூட ஜெயலலிதா பார்க்கவில்லை. எல்லாம் சசிகலா மூலம் தகவல்கள் வெளியே வரும் அவ்வளவுதான்.’’

‘‘ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியைப் புதுப்பித்தது எல்லாம் எதற்கு?’’

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

‘‘இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அப்போலோ டாக்டர்கள் குழு பேட்டி அளித்திருக்கிறார்கள். அதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அரசியலோடு முடிச்சுப் போட்டு, காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள் சிலர். செப்டம்பர் மாதத்தை ஜெயலலிதாவால் எளிதில் மறந்துவிட முடியாது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதிதான் குன்ஹா தீர்ப்பு அளித்து ஜெயலலிதாவை சிறையில் அடைத்தார். அதே செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதே செப்டம்பர் 8-ம் தேதி முக்கியமான நாள். ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்வதற்கு காரணமாக இருந்த நாள் என செப்டம்பர் 8-ம் தேதியை கை காட்டுகிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். ‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பளிக்கப்படும்’ என அன்றைக்குத்தான் சுப்ரீம் கோர்ட் சொன்னது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதாக கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அறிவித்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்துவிட்டது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது சுயசரிதையை ஆல் ஃபிரம் மெமரி (அனைத்தும் நினைவில் இருந்து) என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’ என சொல்லியிருந்தார். இதை சுட்டிக்காட்டி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனுப் போட்டார். அதில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் அழுத்தங்கள் இருந்ததாகக் ஆச்சார்யா சொல்லியிருப்பதால் அவரிடம் விசாரணைக்கு நடத்த வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். இந்த வழக்கு செப்டம்பர் 8-ம் தேதி விசாரணை வந்தபோது நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன’ என ரத்தினத்தின் வழக்குரைஞர் கேள்வி எழுப்பியபோது ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப் படும்’ என தெரிவித்தனர். இந்த நீதிபதிகள்தான் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்தவர்கள். செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து நான்கு வாரம் என்றால் அக்டோபர் 7-ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம்.”

அப்போலோ கவரேஜ் : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

‘‘அதுவரை மருத்துவமனையில் இருந்து விடுவாரா?"

நிருபர்கள் இல்லாத பிரஸ்மீட்!

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து உடனுக்குடன் பிரஸ் ரிலீஸ் வெளியாகிறது. அப்போலோ வெளியிட்ட 3 அறிக்கைகளிலும் ஒரே மாதிரியான வாசகங்கள்தான். 25-ம் தேதி அறிக்கை வெளியாகவில்லை. திடீரென பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது அப்போலோ `டாக்டர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள்' என அறிவிக்கப்பட்டதும் மீடியாவினர் கேள்விகளுடன் காத்திருந்தனர். ஆனால், பிரஸ்மீட்டுக்கு செய்தியாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை. கேமராமேன்களுக்கு மட்டும்தான் அனுமதி என கன்டிஷன் போட்டனர். அதன்பிறகு நடந்த கேமரா ஷூட்டில், “முதலமைச்சர் நலமாக இருக்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்லவேண்டிய தேவை இல்லை” என ரெடிமெட் பதிலை ஒப்பித்துவிட்டு கலைந்து சென்றார்கள். கேள்வி கேட்பதற்கு நிருபர்களே இல்லாமல் நடந்த கேமரா ஷூட்டிங்கை ‘பிரஸ்மீட்’ என சொன்னதுதான் கொடுமை. சின்ன விஷயத்தைக்கூட சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என மீடியாவினர் முணுமுணுக்கின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.