News
Loading...

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக விவசாயிகளை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சம்பா பயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவதை காவிரி கண்காணிப்புக் குழு மேற்பார்வையிடவும், காவிரி கண்காணிப்புக் குழுவை 3 நாட்களுக்குள் தமிழக அரசு அனுகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்நாடகா 50 டிஎம்சி நீர் திறக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. 

ஜுன், ஜுலையில் 50 டிஎம்சி காவிரி நீரை திறக்காததை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது காவிரியில் இருந்து 1.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...