News
Loading...

எந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன

எந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன

ரவுடிகளில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியில்தான் அதிகமான கொலைகள் நடப்பதுண்டு. ஆனால், எந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன. 

தமிழகத்தில், சாதி ரீதியிலான முன்விரோதக் கொலைச் சம்பவங்களில், கடந்த 30 வருடங்களாக முன்னணியில் இருக்கிறது விழுப்புரம் மாவட்டம். மருதூர் கோவிந்தன், மின்னல் ராஜா, ஆர்.கே.சிவா, ஆர்.கே.நாராயணன், கேசவன், சௌந்தர், முருகன் என ரவுடிகளுக்கு உள்ளேயே நடந்த அதிகாரப் போட்டியில், வெட்டி சாய்க்கப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது. கடந்த 14-ம் தேதி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க பிரமுகரின் படுகொலை தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. தி.மு.க-வின் விழுப்புரம் நகரச் செயலாளரான சி.வி.செல்வராஜ் கொலைசெய்யப்பட்டு உள்ளார். ஓர் அரசியல் கட்சியின் நகரச் செயலாளராக இருந்தவர் மீது ரவுடி முத்திரையும், அதற்கான பின்னணியும் இருந்தது வேதனைக்கு உரியது. இப்படிப்பட்ட நபரை எல்லாம் ஒரு அரசியல் கட்சி, நகரச் செயலாளராக வைத்திருந்தது கொடுமையானது.

இவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நேர்முக உதவியாளராகவும் இருந்தவர். விழுப்புரம் வடக்கு ரயில்வே பகுதியில் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் செல்வராஜுக்கு உண்டு. அவர், கடந்த 

14-ம் தேதி காலை 5.30 மணி அளவில் தன் ஆதரவாளர்கள் ஆறு பேருடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்கே இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தைக்  கடந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் முன்பாக வந்து நின்றது. அதில் வந்த மூன்று பேர், செல்வராஜ் அருகே சென்று அவருக்கு வணக்கம் வைத்துக் கை குலுக்கி உள்ளனர். அவர்களிடம், ‘சொல்லுங்கப்பா...’ என்று செல்வராஜ் கேட்டுள்ளார். அப்போது திடீரென்று அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜின் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளனர். 

உடனே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், செல்வராஜ் தப்பித்து ஓடமுடியாதவாறு அவரை மடக்கியுள்ளனர். ‘இந்த ஆளைப் போடப் போறோம்... நீங்க ஓடிருங்க’ என்று செல்வராஜுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், ஜெயப்பிரகாஷ் என்பவர், அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். அவர் கையில் வெட்டு விழுந்தது. உடனே, செல்வராஜுடன் வந்த அனைவரும் ஓடிவிட்டனர். அடுத்து தடுக்க முயன்ற செந்தில் என்பவரும் தாக்கப்பட்டார். அவர், அருகில் இருந்த புதரில் மயங்கி விழுந்தார். பின்னர், சரிந்து விழுந்த செல்வராஜை துள்ளத்துடிக்க வெட்டிய அந்த கும்பல், அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சாவகாசமாக அங்கிருந்து சென்றது.

எந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன

‘‘மின்னல் ராஜா கொலை வழக்கில் குமரன், பத்தர் செல்வம், ரவி அலெக்ஸ், கள்ளிப்பட்டு ஆறுமுகம் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள், ஜாமீனில் வெளியில் வந்தனர். அப்போது குமரன் மற்றும் ரவி அலெக்ஸ் ஆகியோரின் வீடுகள், செல்வராஜுடன் இருந்த மின்னல் ராஜாவின் மைத்துனர் பித்தளை ராஜாவால் அடித்து நொறுக்கப்பட்டன. அந்தச் சம்பவத்துக்கு, செல்வராஜ்தான் காரணம் என்று நினைத்த பத்தர் செல்வம், செல்வராஜை மிரட்டி அடிக்கடி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், தன்னைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் மாதக்கணக்கில் கட்சி அலுவலகத்துக்குக்கூட வராமல் செல்வராஜ் தலைமறைவாக இருந்தார். அதன் பின்னர், அப்போது இருந்த டி.எஸ்.பி ஒருவர், இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி பத்தர் செல்வத்துக்கு செட்டில்மென்ட் வாங்கிக்கொடுத்து, பிரச்னையை முடித்துவைத்திருக்கிறார். அதன் பிறகும் செல்வராஜை மிரட்டிக்கொண்டே இருந்துள்ளார் பத்தர் செல்வம். பத்தர் செல்வம், செல்வராஜ் ஆகிய இருவரையும் அழைத்து சமாதானம் செய்துள்ளார், முன்னாள் அமைச்சர் பொன்முடி.

அதன் பிறகும், தனக்குப் பணம் தரவில்லை என்றால், தலையை எடுத்துவிடுவேன் என்று செல்வராஜை மீண்டும் மிரட்டியிருக்கிறார் பத்தர் செல்வம். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி காலையில் பத்தர் செல்வம் கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிக் கொலை செய்து, அவரது தலையை காந்தி சிலை அருகே வைத்து காலால் எட்டி உதைத்து ஃபுட்பால் விளையாடிவிட்டு போலீஸில் சரண் அடைந்தான் ரவுடி அறிவழகன். இந்தக் கொலையில், முதல் குற்றவாளியே செல்வராஜ்தான் என பத்தர் செல்வத்தின் மனைவி புவனேஸ்வரி அப்போது காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால், செல்வராஜ் அப்போது பொன்முடியின் வலதுகரமாக இருந்ததால், அந்தப் புகாரை போலீஸ் கிடப்பில் போட்டது. அதனால், பத்தர் செல்வத்தில் ஆதரவாளர்களால் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்கிறது போலீஸ் வட்டாரம். பல்வேறு கொலை வழக்குகளுக்காக ஆயுள்தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் இரிசப்பன் ஆட்கள்தான் செல்வராஜை கொலைசெய்து இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

எந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன

இன்னொருபுறம், விழுப்புரத்தில் ரவுடிகளின் அட்டூழியங்களுக்கும் தொடர் கொலைகளுக்கும் முக்கியக் காரணமாக இருப்பது போலீஸ்தான் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது வழக்குகளைப் பதிவு செய்யாமல், கட்டப்பஞ்சாயத்து செய்வது, அவர்களுடன் ‘கூட்டணி’ வைத்து அவர்களை வளர்த்துவிடுவது என்கிற போக்கை போலீஸார் கையாண்டு வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த ஏழு வருடங்களில் 11 ரவுடிகள் தங்களுக்குள் வெட்டிக் கொலை செய்து கொண்டு சரிந்திருப்பதே இதற்கு சாட்சி.

யார் இந்த செல்வராஜ் ?

பி.ஜே.பி-யில் சாதாரண பொறுப்பில் இருந்த இந்த செல்வராஜ் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மூத்த மகனான கௌதம சிகாமணியின் கல்லூரிக்கால நண்பர். அந்தப் பழக்கத்தின் மூலம் 2005-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்த செல்வராஜ், பொன்முடியின் குடும்பத்துக்கு விசுவாசமான ஒருவராக மாறிப்போனார். அதனால், 2006-ல் அமைச்சரான பொன்முடி, அவரை தனது உதவியாளர் ஆக்கினார். கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர், 2013-ல் ஆண்டு தி.மு.க நகரச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார். பொன்முடி குடும்பத்தின் அனைத்து ‘வரவு-செலவுகளையும்’ பார்க்கும் வலதுகரமாகத் திகழ்ந்ததால் அரசியல், பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சியடைந்தார் செல்வராஜ்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...