News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

ஜப்பானில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் அலாரம் அடிக்கும் மெஷின் கண்டுபிடிப்பு
குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா ஆளை அடிக்கிற மெஷினே எங்ககிட்ட இருக்குய்யா... அது பேர் ‘பொண்டாட்டி’!

இந்தி தெரியாதவன் இந்தியாவில் இருக்கக்கூடாது: சுப்ரமணியன் சுவாமி
அரசியல் தெரியாதவா அரசியல்ல இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டா நீங்க எங்கண்ணா போவேள்?

கர்நாடக பாஜகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் சம்பந்தம்  இல்லை: பொன்.ராதாகிருஷ்னன்
ஆமா, போன வாரம்தான் முனியாண்டி கோயில்ல காசு வெட்டிப் போட்டு உறவை முறிச்சிக்கிட்டாங்க...

சிக்கன் குழம்பு கேட்ட கணவனை கழுத்தில் வெட்டிக் கொன்ற மனைவி: செய்தி
நான் எல்லாம் சைவத்துக்கு மாறி முழுசா ரெண்டு நிமிஷமாச்சு!

கமென்ட் கோயிந்து

காவிரிப் பிரச்னையில் தலையிட முடியாது: பிரதமர் மோடி
ஆமா, அவரு ரேஞ்சுக்கு நைல் நதி, அமேசான் ஆறுகளோட பிரச்னைலதான் தலையிடுவாப்ல!

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் உரிய பங்கை புதுச்சேரிக்குத் தர வேண்டும்: நாராயணசாமி
அதுக்கு எதுக்குண்ணே இம்புட்டு பெரிய குடத்தைத் தூக்கிட்டு வந்துருக்கீங்க? அவங்க குடுத்திருக்க தண்ணியில ஒங்க பங்குக்கு ஒரு சொம்புதான் கெடைக்கும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.