News
Loading...

ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்

லண்டன்: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லண்டனில் கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் ஒருவர் தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக கூறினார். அவர்  ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற்காலிக பார்வையிழப்பு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். வலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்த்துள்ளார். 

இந்த பழக்கத்தின் காரணமாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும் இட்டுச்செல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...