News
Loading...

கையில பச்சை குத்தியிருக்கேன்... அம்மா ஆச்சர்யமா பார்த்தாங்க!

கஞ்சா கருப்பு கலகல... பேட்டி

கஞ்சா கருப்பு கலகல... பேட்டி

‘அம்மா... அம்மா... நீ எங்க அம்மா... உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா...’  என்ற காலர் ட்யூன், நடிகர் கஞ்சா கருப்பு செல்போனில் ஒலிக்கிறது. நம்முடைய அழைப்பை எடுத்தவர், “சொல்லுங்க... கருப்பு பேசறேன்” என்றார்.

“திடீர்னு அ.தி.மு.க-வுல சேர்ந்திருக்கீங்க?”

“திடீர்னு எல்லாம் இல்லண்ணே. எப்பவுமே நான் அ.தி.மு.க-வோட தீவிர அனுதாபி. அம்மாவோட தீவிர பக்தன்தான். நான் பொறந்தப்போ, முதல்ல பார்த்ததே எம்.ஜி.ஆரையும்., ஜெயலலிதா அம்மாவையும்தான். எப்டின்னு கேளுங்க... எங்க அம்மா, ‘குடியிருந்த கோவில்’ படம் பாத்துக்கிட்டு இருந்திருக்கு. ‘உன் விழியும்.. என் வாளும் சந்தித்தால்..’ பாட்டு ஓடிக்கிட்டு இருந்திருக்கு. அப்பத்தான், நான் பொறந்தேனாம். அப்ப இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் தான் தெய்வம். எனக்கு அரசியல் ஆர்வம் திடீர்னு பொறக்கல. வாய்ப்பு கெடச்சப்போ எல்லாம் அதை வெளிக்காட்டிகிட்டே வந்திருக்கேன். இப்போ, அதிகாரபூர்வமாக இணையவேண்டும் என்று தோணுச்சு... இணைஞ்சுட்டேன்.’

“ஜெயலலிதா உங்களிடம் எதாவது சொன்னாரா?”

‘விழாவில என்னைப் பாத்தப்ப, ‘மிக்க மகிழ்ச்சி’ னு சொன்னாங்க. ஆனா இதுக்கு முன்னாடி ஒரு தடவை ஏர்ப்போர்ட்ல அம்மாவுக்கு வணக்கம் சொன்னேன். ‘படம் எல்லாம் எப்படி போகுது?னு கேட்டாங்க. கையில ரெட்டை இலை பச்சை குத்தி இருக்குறதைப் பார்த்து, எப்போ குத்தினதுனு கேட்டாங்க. ஏழு வயசுலனு சொன்னேன். ஆச்சர்யத்தோட பாத்துச் சிரிச்சாங்க. இனிமே நான் அ.தி.மு.க தொண்டன். அம்மாவுக்கு ஆதரவா வாழ்க்கைய ஓட்டுவேன். அம்மாவோட திட்டங்கள, கொள்கைகள மக்களுக்குக் கொண்டு போற வேலைய செய்வேன்.’

நடிகர் கருணாஸ் அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ ஆகிவிட்டார். அதைப் பார்த்து நீங்கள் அ.தி.மு.க-வுல சேர்ந்தீங்களா?

‘ ஏண்ணே.. வம்பு பண்றீங்க... வி.பி.கலைராஜன் அண்ணன் எனக்கு ரொம்ப சொந்தம். அவருதான், ‘ எத்தனை நாளுக்கு வெளியே இருப்பே. கட்சிக்கு வா’னு கூப்புட்டாரு. வந்துட்டேன். பதவி வாங்குற ஆசையெல்லாம் நமக்கு இல்லண்ணே. யாருக்கு என்ன பதவி கொடுக்கணும்னு அம்மாவுக்குத் தெரியும்ண்ணே.”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...